சிற்பிகள்நாயகி பாமாலை பாகம் 2
இந்த இரண்டாவது இசைத்தட்டை திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்கு சமர்ப்பணமாக ஆக்கிய
சமயத்தில், அம்மைக்கென தனியாகவுள்ள 8 பாடல்களோடு, அம்பிகையின் தெற்குவாழ் பிரசித்திபெற்ற
திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையாரை முதன்மையாகக்கொண்டு அவருக்கொரு பாடலும் , அன்னையின்
வடக்கு வீதிக்கருகில் அமைந்திருக்கும் சின்னக் காளிகோயிலையும் அங்கு ஆதிமூலம்வாழ் அரவங்களையும்
மனதில்நினைந்து ஒரு பாடலும், பாரறியும் நல்லூர் கந்தனையும் அவன் புகழையும் நினைந்து ஒரு பாடலும்,
2004 இல் இலங்கையில் கணக்கற்ற உயிர்களைப் பலிகொண்ட சுனாமியினை மனதில்வைத்து, வல்லிபுரம்வாழ்
ஆழ்வாருக்கு ஒரு பாடலுமாக, 12 பாடல்கள் இதில் உள்ளன.